கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் விளையாட்டு விழா துவங்கியது. இவ்விழாவினை கோவைப்புதூர் 4th பெட்டாலியன் கமாண்டன் திரு செந்தில்குமார் டி பி எஸ் அவர்கள் விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்தார். மேலும் துவக்க விழாவில் பல்கலைக்கழக மாணவியர் மற்றும் மாணவர்களுக்கு விளையாட்டு துறையின் மூலமாக அரசு துறையின் வேலை வாய்ப்புகள் சம்பந்தமாகவும் வாழ்வில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்தும், நோய் நொடியற்ற வாழ்வியலின் மகத்துவத்தை பற்றியும் , விளையாட்டு விளையாடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுதல் பற்றியும் இந்த போட்டியின் போது சிறப்புரையாற்றினார். இந்த விளையாட்டு விழாவில் கற்பகம் பல்கலைக்கழக உடற் கல்வி துறை இயக்குனர் முனைவர் சுதாகர் வரவேற்புரை வழங்கினார். மேலும் கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ரவி வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். மேலும் சிறப்பு விருந்தினர்கள் முன்னணியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இன்ஜினியரிங் ஆர்க்கிடெக்சர் பார்மசி இடையான போட்டியில் இன்ஜினியரிங் அணி 160 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. கலை அறிவியல் மேலாண்மை துறையில் நடைபெற்ற போட்டியில் மேலாண்மை துறை 145 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றது . வெற்றி பெற்ற வீரர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.



Leave a Reply