தென்காசி மாவட்ட ஹேண்ட்பால் கழகம் மற்றும் ஸ்ரீமாதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியும் இணைந்து 15 வயதுக்கு உட்பட்டோர்க்கான ஆண்கள் ஹேண்ட்பால் விளையாட்டு போட்டி நடைபெற்றது இதில் மாவட்டத்தில் இருந்து 8 அணிகள் பங்கு பெற்றன. போட்டிகள் முறையே லீக் சுற்றுக்கள் அடிப்படையில் நடை பெற்றன. போட்டியில் ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல் இடத்தையும், சின்மயா வித்யாலயா பள்ளி இரண்டாம் இடத்தையும், ஸ்ரீகெங்கசாமி நாயுடு பள்ளி மூன்றாம் இடத்தையும், சங்கரன்கோவில் ஹேண்ட்பால் அகாதமி நான்காம் இடத்தையும் பெற்றன. முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் தென்காசி சிட்டி ட்ராபிக் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் தமிழன் போலீஸ் பயிற்சி அகாதெமி நிறுவனர் ராதா கிருஷ்ணன் மற்றும் ஆனந்தகுமார் மேலும் பள்ளியின் தாளாளர் புலியூறான் மற்றும் துணை முதல்வர் ஸ்ரீராம் அவர்கள் கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார்கள். போட்டியின் நிறைவில் மாவட்ட சங்க செயலாளர் திரு பாலமுருகன் மற்றும் சங்க உறுப்பினர் திரு எட்டையா அவர்கள் பள்ளியின் தாளாளர் மற்ற ஏனைய அணியின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பைகளும், சான்றிதழ்களும் மாவட்ட ஹேண்ட்பால் கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டன.


Leave a Reply