மாணவர்களுக்கு பாராட்டு விழா

மதுரை சோபுக்காய் கராத்தே பள்ளியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கராத்தே மற்றும் சிலம்ப பட்டய தேர்வில் பங்கேற்று சான்றிதழையும் பட்டயங்களையும் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது இவ்விழாவில் கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளரும் தொழில்நுட்ப இயக்குனருமான டாக்டர் சுரேஷ்குமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார் மேலும் கராத்தே மற்றும் சிலம்பப் பயிற்சியாளர்களான கார்த்திக், அங்குவேல், பாலகாமராஜன், தணிகைவேல், அஜித் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்