பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான
கையுந்து போட்டி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரியில் டிசம்பர் 14மற்றும் 15ஆம் தேதியில் நடைபெற்றது இந்தப் போட்டிகளை கல்லூரியின் செயலர் முனைவர் கந்தப்பன் துவக்கி வைத்தார் லீக் சுற்று போட்டிக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றன இறுதியாக PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடமும் Dr. NGP கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டாம் இடமும் ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாம் இடமும் பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி நான்காம் இடமும் பெற்றனர் பரிசளிப்பு விழாவில் பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் முனைவர் ராஜேஸ்வரன் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பேராசிரியர் முனைவர் அண்ணாதுரை கலந்துகொண்டு கோப்பையை வழங்கினர் இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வித்துறை ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் ஏற்பாடு செய்தனர்.

Leave a Reply