கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் லீக் போட்டி

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் லீக் போட்டி

இரண்டாவது டிவசனுக்கான போட்டியில் ஆதித்திய சி.சி அணியும் விஜய் சி.சி அணியும் மோதின.முதலில் ஆடிய ஆதித்திய சி.சி அணி 32.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 120 ரன்கள் எடுத்தனர்.பின்னர் ஆடிய விஜய் சி.சி அணி  21.1 ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 124 ரன்களை எடுத்து வெற்றி பெற்றனர்.

இரண்டாவது டிவிசனுக்கான மற்றொரு போட்டியில் ரெட் டைமண்ட் அணியும் ரெயின்போ 1972 MNCC அணியும் மோதினர்.முதலில் ஆடிய ரெட் டைமண்ட் அணி 48 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 184 ரன்களை எடுத்தனர்.ஹரி குமார் M.N 5 விக்கெட்களை கைப்பற்றினார்.பின்னர் ஆடிய ரெயின்போ 1972 அணி 29.5 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.அதிக பட்சமாக ஆதித்யன் S.S. 51 ரன்கள் எடுத்தார்.

மூன்றாவது டிவிசனுக்கான போட்டியில் ரெயின்போ KMP அணியும்  கோவை காம்ரேட்ஸ் அணியும் மோதின.முதலில் ஆடிய ரெயின்போ KMP அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்தனர்.அதிகபட்சமாக S.பிரித்வி ராஜ் 101 ரன்களும்,A.அருண்பாண்டியன் 110 ரன்களும் எடுத்தனர்.பின்னர் ஆடிய கோவை காம்ரேட்ஸ் சி.சி அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 299 ரன்கள் எடுத்து தோல்வியுற்றனர்.அதிகபட்சமாக R.ஸ்ரீராம் 59 ரன்களை எடுத்தார்.

ஐந்தாவது  டிவிசனுக்கான போட்டியில் கே.எப்.சி.சி.அணியும் ரத்தினம் கல்லூரி அணியும் மோதின.முதலில் ஆடிய கே.எப்.சி.சி அணி 38.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்கள் எடுத்தனர்.பின்னர் ஆடிய ரத்தினம் கல்லூரி அணி 42 ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.

ஆறாவது டிவிசனுக்கான போட்டியில் ORCC அணியும் கோவை புளூ நைட்ஸ் அணியும் மோதினர்.முதலில் ஆடிய ORCC அணி 26.4 ஓவரில் அனைத்து விக்கெட்களை இழந்து 52 ரன்கள் எடுத்தனர்.அதிகபட்சமாக D.சந்திரசேகர் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.பின்னர் ஆடிய கோவை புளூ நைட்ஸ் அணி 16.2 ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 58 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.ORCC அணி சார்பாகV.நவீன் குமார் 7 விக்கெட்களை கைப்பற்றினார்.