தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக, 24 பேர் கொண்ட புதுச்சேரி பள்ளி, கல்வி துறை அணியினர், உத்திரபிரசேத மாநிலம் புறப்பட்டு சென்றுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில், 68 வது தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், 14 வயதிற்குட்பட்ட மாணவ -மாணவிகளுக்கான வாலிபால் விளையாட்டு போட்டி இன்று (10ம் தேதி) துவங்கி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில், பங்கேற்பதற்காக புதுச்சேரி பள்ளி கல்வி துறை சார்பில், 24 பேர் கொண்ட ஆண்கள், பெண்கள் அணியினர் உத்திரபிரதேச மாநிலம் புறப்பட்டு சென்றுள்ளனர்.
முன்னதாக, புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடந்த வழியனுப்பும் நிகழ்ச்சியில், பள்ளி கல்வி துறை துணை இயக்குனர் வைத்தியநாதன் பங்கேற்று, வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சீறுடைகள் வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். பயிற்சியாளர்களாக நாராயணன், தேவேந்திரன், சுரேஷ், சித்ரா ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

Leave a Reply