தென்காசி மாவட்ட சதுரங்க மேம்பாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் இலஞ்சியில் உள்ள பாரத் வித்தியா மந்திர் பள்ளியில் நடைபெற்றது, மேற்கண்ட போட்டியில் நமது தேனி மாவட்டத்தை சார்ந்த எங்கள் கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி மாணவர்கள் Under – 10 பிரிவில் J.தியாஸ்ரீ முதலிடமும்,A.லோகேஷ் கிருஷ்ணா இரண்டாம் இடமும், N. சாய் சரவணா நான்காமிடமும் பிடித்து வெற்றி பெற்றனர், அதே போல் Under-13 பிரிவில் R. சாத்வீகா முதலிடமும் S.P.புவன்சங்கர் இரண்டாம் இடமும் S. சைரஸ்பிளசன் 6-ம் இடமும், S. சூரிய குமரன் 8-ம் இடமும், S. சுஜிந்திரன் 9-ம் இடமும்,M. ஹரிபிரசாந் 10-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர், Under – 17 – பிரிவில் A. திரு கார்த்திக் 2-ம் இடமும் S.மதனா மூன்றாமிடமும்,A. பிரத்திக்ஷா 4-ம் இடமும், D.லலிதா 5-ம் இடமும்,T. தருணிக்கா 6-ம் இடமும், P. பிரேம் 7ம் இடமும் பிடித்து வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர், அவர்களுக்கு போட்டியின் சிறப்பு அழைப்பாளாரக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநிலத் தலைவர் A.M. விக்கிரமராஜா அவர்களும், தென்காசி மாவட்ட சதுரங்க கழக தலைவர் R.K. காளிதாசன், இயக்குனர் S. கண்ணன் அவர்களும், பாரத் கல்வி குழுமத்தின் செயலாளர் திருமதி. காந்திமதி மோகனகிருஷ்ணன் அவர்களும் பரிசுகள் வழங்கி பாராட்டினார், இன்று வெற்றி பெற்று பரிசுகளுடன் வந்த மாணவர்களை எங்கள் தேனி கிராண்ட் மாஸ்டர் அகாடமி தலைவர் S. சையது மைதீன், செயலாளர் R.மாடசாமி அவர்களும், பொருளாளர் ஆசிரியர் S.கணேஷ் குமார் அவர்களும், இணை செயலாளர் S. அமானுல்லா அவர்களும் , இயக்குனர் S.அஜ்மல்கான் அவர்களும் பாராட்டி வாழ்த்தினர்.

Leave a Reply