மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

தமிழ்நாடு மாநில சதுரங்க கழகமும், திண்டுகல் RVS கல்வி குழுமமும், ஆனந்செஸ் அகாடமியும் இணைந்து மாநில அளவிலான சதுரங்கப் போட்டியை பள்ளி மாணவர்களுக்காக   RVS கல்வி வளாகத்தில் நடத்தினர், மேற்கண்ட போட்டியில்  தேனி மாவட்டத்தை சார்ந்த  கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி மாணவர் J.தியாஸ்ரீ முதலிடமும், A. லோகேஷ் கிருஷ்ணன் மூன்றாம் இடமும், R. சாத்வீகா 5-ம் இடமும், B. ஹனிசாக்ஸ்திதா 6-ம் இடமும்,A. திருகார்த்திக்  9-ம் இடமும் பிடித்தனர். மற்றும் G. ஸ்ரீநித் S.B.புவன் சங்கர், K.தமன்யா, S. சர்வேஷ்வர், S.சூர்யகுமரன், S. மதனா, B. சித்தேஷ், S.சிந்து ஐஸ்வின் ஆகியோர்களும் வெற்றி பெற்றனர் . இவர்களுக்கு RVS கல்வி குழுமத்தின் தலைவர் Dr.K.V. குப்புசாமி, கல்லூரி முதல்வர் Dr.G.ரமேஷ்குமார், ஆனந்செஸ் அகாடமி செயலாளர் N. ரமேஷ்குமார், சர்வதேச சதுரங்கநடுவர் M.உமாபதி, சீனியர் தேசிய நடுவர் பிச்சைமணி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினார், மேலும் அதிக பரிசுகள் வென்ற எங்கள் தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமிக்கு சிறந்த அகாடமி க்கான விருதும் அகாடமி தலைவர் S. சையது மைதீன் அவர்களுக்கு வழங்கி  சிறப்பிக்கப்பட்டது. இன்று வெற்றி பெற்று பரிசுகளுடன் வந்த மாணவர்களை எங்கள் தேனி கிராண்ட் மாஸ்டர் அகாடமி தலைவர் S. சையது மைதீன், செயலாளர் R.மாடசாமி அவர்களும், பொருளாளர் ஆசிரியர் S.கணேஷ் குமார் அவர்களும், இணை செயலாளர் S. அமானுல்லா அவர்களும் , இயக்குனர் S.அஜ்மல்கான் அவர்களும் பாராட்டி வாழ்த்தினர்.

.