தமிழக அணிகள் வெண்கலம்

தேசிய ‘மினி ரோல் பால்’ சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக அணிகள் வெண்கலம்

அசாமின் கவுகாத்தியில், 11 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான தேசிய ‘மினி ரோல் பால்’ சாம்பியன்ஷிப் 14வது சீசன் நடந்தது. சிறுவர்களுக்கான லீக் சுற்றில் முதலிடம் பிடித்த தமிழக அணி, காலிறுதியில் 5-3 என ராஜஸ்தானை வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் தமிழக அணி 2-7 என அசாமிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.

சிறுமிகளுக்கான லீக் சுற்றில் முதலிடம் பிடித்த தமிழக அணி, காலிறுதியில் 3-1 என்ற கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் தமிழக அணி 3-5 என ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றியது.

தமிழக அணியில் கோவையை சேர்ந்த மாணவிகள் அதிதி,ஹர்னிகா , லியா கார்த்திக் , தன்வி எஸ் ஜுமானி , சாஸ்திகா  மாணவர் ஹர்ஷீத் இடம் பெற்றிருந்தனர்.

பதக்கம் வென்ற தமிழக சிறுவர், சிறுமிகளுக்கு, தென்னிந்திய ‘ரோல் பால்’ செயலர் சுப்ரமணியம், தமிழக செயலர் கோவிந்தராஜன், துணை தலைவர் பிரேம் நாத் வாழ்த்து தெரிவித்தனர்.