ஆத்தூர் அடையாளம் “சாதனை வீராங்கனை” த.ப.எழில்மதி

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த பழனிவேல்,தனம் தம்பதியின் இளைய மகள் எழில்மதி சிறு வயது முதலே விளையாட்டு மீது ஆர்வம் கொண்டு பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார் எழில்மதி தனது தந்தை பழனிவேல் அவர்களை போலவும் தனது சகோதரர் கலைமாறன் போலவும் தானும் வாலிபால் வீரர் ஆகவேண்டும் என்ற ஆசை சிறு வயது முதலே எழில்மதிக்கு இருந்துள்ளது.தனது 10 வயதில் தான் பயின்ற  பள்ளியில் வாலிபால் பயிற்சியை மேற்கொண்டார்.11வயதில் பள்ளிகளுக்கான நடைபெற்ற தேசிய போட்டியில் கலந்துகொண்டார்.மேலும் தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியில் விளையாட தேர்வானர் இதையடுத்து அதே ஆண்டு சர்வதேச 17வயதுகுட்பட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மகளிர் வாலிபால் அணியில் தேர்வாகி அணியில் இடம்பெற்றார் இந்திய அணி அப்போட்டியில் நான்காவது இடம் பிடித்தனர்.இத்தாலி நாட்டில் நடைபெற்ற 19 வயதுகுட்பட்ட சர்வதேச வாலிபால் போட்டியிலும் இந்திய அணியில் விளையாடினார் எழில்மதி அத்தொடரில் இந்திய அணி நான்காம் இடம் பிடித்தது.மகளிர் வாலிபால் போட்டியில் தனக்கென்று தவிர்க முடியாத இடத்தை  இந்திய வாலிபால் அணியில் தக்க வைத்துகொண்டார் எழில்மதி மேலும் படிப்பிலும் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்கள் பெற்று  படிப்பிலும் சாதித்தார்.மேலும் தன் திறமையால் சீனியர் மகளிர் இந்திய வாலிபால் அணியில் இடம் பிடித்தார் எழில்மதி.2023ம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடினார்.மேலும் இவரை ஐ.சி.எப் வேலை வாய்ப்பு வழங்கி கெளரவித்தனர். தான் இந்தியா அணிக்காக பல்வேறு போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் எனவும்  தீவிர பயிற்சியும்  பெற்றோர்கள் ஆசிரியர்கள்,பயிற்சியாளர்களின் ஒத்துழைப்பு போன்றவை தனக்கு கிடைத்ததை போல் அனைத்து  விளையாட்டு வீரர்களுக்கும் கிடைத்தால் அனைவருமே சாதனையாளர்கள் தான் என தெரிவித்தார் எழில்மதி.மேலும் இவரது சகோதரர் கலைமாறன் அவர்களும் சிறந்த வாலிபால் வீரர் ஆவார் இவர் தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளை செய்துள்ளார் என்பது குறிபிடதக்கது.

-சசிகுமார்