கோவை சஹோதயா 44வது மாவட்டங்களுக்கு இடையேயான தடகளப் போட்டி

சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ மாணவியருக்கு மாவட்டங்களுக்கு இடையேயான தடகளப் போட்டி நேற்று முதல் வரும் 25ம் தேதி வரை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான 44 கோயம்புத்தூர் சகோதயா ஸ்கூல் காம்பிளக்ஸ் சார்பில்,44ம் ஆண்டு மாவட்டங்களுக்கு இடையேயான தடகளப்போட்டி,கோவை நேரு ஸ்டே டியத்தில் நடக்கிறது.
போட்டியை,முன்னாள் டி.ஜி.பி சைலேந்திர பாபு துவக்கி வைத்தார் கே.எஸ்.ஆர் கல்வி குழும தலைவர் ஸ்ரீனிவாசன்,முதன்மை செயல் அதிகாரி அகிலா ஆகியோர் தலைமை வகித்தனர்.
இப்போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 3,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
மாணவர்களுக்கு 100m, 200m, 4000m, 800m, 1,500m, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல்,குண்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மேலும் கோவை சஹோதயா பள்ளி வளாகம்
தலைவர் நவமணி,சுகுணா தேவி,துணைத் தலைவர் டாக்டர். மார்ட்டின்,எஸ்.என் செயலாளர் நிர்மலா,விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ஞானபண்டிதன்,
ஐடி தலைவர் டாக்டர். அபிஷேக் ஜாக்சன்,
பயிற்சித் தலைவர் கவிதா,நிகழ்வுகள் தலைவர் டாக்டர் அரசு பெரியசாமி,தேர்வுத் தலைவர் வித்யாசங்கர் ஆகியோர் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.