டேக்வாண்டோ சாம்பியன்  ஆப் சாம்பியன்

தேசிய அளவில் சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கம் சார்பாக இந்தியா டேக்வாண்டோ சாம்பியன்  ஆப் சாம்பியன் டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள்  சேலம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி உள்விளையாட்டு அரங்கில்  நடைபெற்றது, இப்போட்டியை  இந்தியா டேக் வாண்டோ  துணைத் தலைவர் சாக்ரடீஸ் மற்றும் தமிழ்நாடு   

டேக்வாண்டோ சங்கச் செயலாளர் சித்தேஸ்வரன் அவர்கள் துவக்கி வைத்தார், இப்போட்டியில் இந்திய டேக்வாண்டோ நடுவர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஆசியா டேக் வாண்டோ அமைப்பின் எஜுகேஷனல் கமிட்டி உறுப்பினருமான   தினேஷ்குமார் அவர்கள் மூலம் நடத்தப்பட்டது, இந்தியாவில் இருந்து  அனைத்து மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாடு, பாண்டிச்சேரி,கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேஷ், டெல்லி, அசாம், மத்திய பிரதேஷ், ஹரியானா, SSCB RAPEL மற்றும் பல மாநிலங்களில் இருந்து மொத்தம் 400  மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர், இப்போட்டி  பதினேழு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நடைபெற்றது, KUYRAGI- , மற்றும் POOMSAR-  ப  சர்வதேச மற்றும் தேசிய நடுவர்களை கொண்டு இப்போட்டி நடத்தப்பட்டது, வெற்றி பெற்ற மாணவ மாணவிகள்  தங்கம், வெள்ளி, பதக்கங்கள் பெறும் மாணவ மாணவிகள் மகாராஷ்டிராவில் நடக்க இருக்கும் சாம்பியன் ஆப் சேம்பியன் டேக் வாண்டோ  போட்டியில் பங்கு பெறுவார்கள், பிறகு மகாராஷ்டிராவில் தங்கம் மற்றும் வெள்ளி வெற்றி பெறும் மாணவ மாணவிகள் ஆசியா டேக்வாண்டோ போட்டிக்கு பங்கு கொள்வார்கள், என தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கம் தெரிவித்துள்ளனர்,