பள்ளி மாணவ – மாணவியருக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவ – மாணவியருக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி, ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடத்தப்பட்டது.

மாணவர் பிரிவு இறுதிப்போட்டியில், ஏ.பி.சி., மெட்ரிக் பள்ளி அணி 2 – 0 என்ற செட் கணக்கில் வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா மெட்ரிக்., பள்ளியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. மாணவியர் பிரிவு இறுதிப்போட்டியில், இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணி 2 – 0 என்ற செட் கணக்கில் ஏ.பி.சி., மெட்ரிக்., பள்ளி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது