பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டி

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியானது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் இருந்து மொத்தம் 40 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கு பெற்றனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளின் முடிவில் ஆண்கள் பிரிவில் முதல் நான்கு இடங்களின் முறையே முதல் இடத்தை கன்னியாகுமாரி விவேகானந்தா கல்லூரி அகஸ்தீஸ்வரம் கல்லூரி அணியும், இரண்டாம் இடத்தை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் சுல்லூரி அணியும், மூன்றாவது இடத்தை கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் கல்லூரி அணியும், நான்காவது இடத்தை கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் வெற்றி பெற்று கோப்பைகளை தட்டிச் சென்றன. அதே போல் பெண்கள் பிரிவில் முதல் நான்கு இடங்களின் முறையே முதல் இடத்தை திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி அணியும், இரண்டாம் இடத்தை திருநெல்வேலி தெக்ஷஷன மாற நாடார் சங்கம் கல்லூரி அணியும், மூன்றாவது இடத்தை தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி அணியும், நான்காவது இடத்தை பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி அணியும் வெற்றி பெற்று கோப்பைகளை தட்டிச் சென்றன. இந்நிகழ்வின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் ம. சு. பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் திரு ஜே.சாக்ரடீஸ் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரி அணி வீராங்களைகளுக்கு சுழற்கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்துப் பாராட்டிப் பேசினார். இப்போட்டிகளில் சிறப்பு விருந்தினர்களாக பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியின் விளையாட்டுத்துறையின் முன்னால் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியருமான முனைவர் திரு இளங்கோ அவர்களும், முக்கூடலில் உள்ள பாலகன் சரஸ்வதி கலை

மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி கிருஷ்ணவேணி அவர்களும் கலந்து

கொண்டு சிறப்புரையாற்றி விழாவினை சிறப்பித்தார்கள். முன்னதாக ம. சு. பல்கலைக்கழக விளையாட்டு மைய

இயக்குநர் மற்றும் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் திரு

சு.ஆறுமுகம் அவர்கள் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்வின் முடிவில் உடற்கல்வியியல் மற்றும்

விளையாட்டுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் திரு செ. துரை அவர்கள் போட்டிகளுக்கான அனைத்து

ஏற்பாடுகளையும் செய்து முடிவில் நன்றியுரையாற்றினார். இப்போட்டிகளின் நடுவர்களாக தமிழ்நாடு மாநில

பளுதாக்கும் சங்கத்தின் நடுவர்கள் நடுவர்களாக செயல்பட்டார்கள். இந்நிகழ்வில் ம. சு. பல்கலைக்கழக

விளையாட்டுப் போட்டிகளின் கன்வீனரான கன்னியாக்குமரி விவேகானந்தா கல்லூரியின் உடற்கல்வி

இயக்குநர் முனைவர் திரு ஜான் ரஸ்கின் அவர்கள், உறுப்புக்கல்லுரிகளின் உடற்கல்வி இயக்குநர்கள்,

விளையாட்டுத்துறைப் பேராசியர்கள், மாணவ, மாணவிகள், ஆலுவலகப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து

கொண்டனர்.