இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வாழப்பாடி விளையாட்டு சங்கம்

துவக்க நிலை,இடைநிலை மற்றும் தொழில்முறை விளையாட்டு வீரராக உருவாக வேண்டுமா உங்களுக்கான வாய்ப்பை வழங்குகிறது வாழப்பாடி விளையாட்டு சங்கம்.டி.என்.சி.எல் அதாவது தமிழ்நாடு சாம்பியன்ஷிப் லீக் என்னும் தலைப்பில் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளை நடத்தி வீரர்களை உருவாக்கி வருகின்றார். வாழப்பாடி விளையாட்டு சங்கத்தின் நிறுவனர் பாலமுருகன் சிவராமன் இவர் 2020ம் ஆண்டு வாழபாடி கிராமபுரத்தில் வாழப்பாடி விளையாட்டு சங்கத்தை துவக்கினார்.கொரனோ காலகட்டத்தில் குழந்தைகள் விளையாட்டு போட்டியில் ஆர்வம் இல்லாமல் இருந்தனர் அவர்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்ட பாலமுருகன் உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறை உதவியுடன் விளையாட்டு சங்கத்தை தொடங்கினார்.முதலில் அப்பகுதி குழந்தைகளுக்கு சிலம்பம்,யோகா அடிப்படையான விளையாட்டு போட்டிகளை பயிற்றுவித்தார் மேலும் வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் விளையாட்டுக்கு தேவையான் உள்கட்டமைப்பு,விளையாட்டு மைதானம்  இல்லாமல் இருந்துள்ளது.குழந்தைகளுக்கும்,இளைஞர்களுக்கு ஆர்வமும் திறமையும் இருப்பதை அறிந்த வாழபாடி விளையாட்டு சங்கம்  அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும்  அதாவது தடகளம்,கபடி,வாலிபால்,கால்பந்து பயிற்ச்சி அளிக்க ஆராம்பித்தனர்.மேலும்  வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள  பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாவட்ட,மண்டல அளவிலான போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றனர்.மேலும் இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டியில் பங்குபெறும் அளவிற்க்கு கட்டமைப்பை உருவாக்கினர் வாழபாடி விளையாட்டு சங்கம்.தங்களது விளையாட்டு சங்கத்தில் மாணவர்கள் அடுத்தகட்டம் செல்லவும் தங்களது திறமை வெளியே தெரியவும் மற்ற மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் தங்களுது திறமையை வெளிபடுத்த   தமிழ்நாடு சாம்பியன் லீக் என்ற அமைப்பை உருவாக்கி வருடத்திற்கு ஒருமுறை தமிழ்நாடு சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி மற்றும் பேஸ்கட் பால் லீக்,வாலிபால் லீக்,கபடி லீக் போட்டி என நடத்த முடிவெடுத்தனர் அதன்படி முதலாம் ஆண்டுக்கான தமிழ்நாடு சாம்பியன் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.முதாலம் ஆண்டு தொடக்கம் கிரிக்கெட் லீக் எதற்காக ஆரம்பிக்கபடுகிறது என அதன் தலைவரும் வாழப்பாடி விளையாட்டு சங்கத்தின் தலைவருமான பாலமுருகன் சிவராமன் நம்மிடையே கூறுகையில்

 கிராமபுறத்தில் உள்ள வீரர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று விளையாடி வருகின்றனர் இவர்கள் மாவட்ட போட்டியிலும் கலந்து கொள்ள தங்களது திறமையை நிரூபிக்கவும் அடுத்த கட்டம் செல்லவும் சரியான பயிற்சியும் வாய்ப்பும் கிடைப்பது இல்லை அவர்களுக்கான வாய்ப்பும் சிறந்த பபிற்சியும் வழங்கபடுகிறது எனவும்

இதுபோன்ற லீக் போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றாலும் போதுமான வாய்ப்புகள் பிறருக்கு வழங்கப்படுவதில்லை எனவே தாங்கள் உருவாகிய இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மொத்தம் 160 வீரர்களை தேர்வு செய்து 10 அணிகளாக பிரித்து அவர்களை அனைத்து போட்டிகளும் விளையாட  வைத்து அவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கப்படுகிறது மேலும் அவர்களை 20 மற்றும் 50 ஓவர் போட்டிகளில் விளையாட வைத்து அவர்களின் திறமையை உலக அறிய செய்வதே இந்த சாம்பியன்ஷிப் லீக்கின் முக்கிய நோக்கம் எனவும் .கிரிக்கெட் மட்டும் இல்லாமல் பல்வேறு  விளையாட்டுப் போட்டிகளையும் இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

புதிய தொடக்கத்தை நம்பிக்கையுடன் துவங்கி உள்ள வாழப்பாடி விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் லீக் கமிட்டிக்கு ஸ்போர்ட்ஸ் 1 சார்பாக வாழ்த்துக்கள்