மாநில அளவிலான ஸ்கேடிங் போட்டி

மாநில அளவிலான மாணவர்களுக்கான ஓபன் பிரிவு ஸ்கேடிங் போட்டி கோவை பட்டணம் புதூரில் நடைபெற்றது இதில்  தமிழகத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.கோவை காளம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மான்செஸ்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கலந்துகொண்ட 7 மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டு 12 பதக்கங்களை பெற்றனர்.இதில் கயல் இரண்டு தங்கமும்,மோகன்யா இரண்டு வெள்ளி பதக்கமும்,ஜிஷ்னு சாய் ஒரு தங்கமும் ஒரு வெள்ளி பதக்கமும்,குகன் ஆதித்யா இரண்டு தங்க பதக்கமும், சஞ்சித் இரண்டு தங்கபதக்கமும்,நேகா இரண்டு தங்கபதக்கமும் வென்றனர்.வெற்றி பெற்த மாணவர்களை மான்செஸ்டர் ஸ்போர்ட்ஸ் அகடாமி இயக்குனர் செல்வராஜ் ,கவிதா ஆகியோர் பாரட்டினர்