4வது மாநில அளவிலான இலக்குப்பந்து போட்டி

தண்டலம் சவிதா பல்கலைக்கழகத்தில்  4வது மாநில அளவிலான இலக்குப்பந்து போட்டி மற்றும் 2வது கலப்பு இலக்குப்பந்து போட்டியானது, 16 பிப்ரவரி 2024 முதல் 17 பிப்ரவரி 2024 வரை  நடைபெற்றது இந்த போட்டியானது லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது இந்த போட்டியில் மதுரை, தென்காசி, தர்மபுரி, செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர் இந்தப் போட்டியின் முடிவில் ஆண்கள் அணியில் திருவண்ணாமலை முதலிடத்தையும் மதுரை இரண்டாம் இடத்தையும் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மூன்றாம் இடத்தை தட்டிச் சென்றனர் இதே போன்று மகளிர் பிரிவில் காஞ்சிபுரம் முதலிடத்தையும் தர்மபுரி இரண்டாம் இடத்தையும் திருவள்ளுவர் மற்றும் திருவண்ணாமலை மூன்றாம் இடத்தை தட்டி சென்றனர் கலப்பு பிரிவில் காஞ்சிபுரம் முதலிடத்தையும் சென்னை இரண்டாம் இடத்தையும் திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மூன்றாம் இடத்தை தட்டிச் சென்றனர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி மாவட்ட செயலாளர் களை மற்றும் வீரர் வீராங்கனைகளை தமிழ்நாடு இலக்குபந்து கழகத்தின் சார்பில் முனைவர். செந்தில் குமார் சேர்மன் (TNTA), சசி குமார் தலைவர் (TNTA), முனைவர். ஜமால் ஷரிப் G F, பொதுச் செயலாளர் (TNTA) அனைத்து அலுவலகப் பணியாளர்கள் மற்றும் TNTA குடும்ப உறுப்பினர்கள் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.